search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் மாணவன் பலி"

    • இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அப்பு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தனுஷ் (வயது16). இவர் நேற்று இரவு இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவபாரத் (21) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சிவபாரத் மீண்டும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த புதுயுகம் மற்றும் அவரது மனைவி கவுரம்மாள் ஆகியோர் மீது மோதினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதனால் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றபோது தனுஷின் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்து போலீசாரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையின் கேட்டை பூட்டி ஆம்புலன்ஸ் செல்லாதவாறு தகராறில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் (பொ), ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு அமலா அட்வின், ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை அப்புறப் படுத்தப்பட்டு இறந்த தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்த வரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×